கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 02 முதல் செப்டெம்பர் 02 வரையில் உயர் தரப் பரீட்சை இடம்பெறவுள்ளது. இக்காலப் பகுதியில் இப்பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு கருத்தரங்குகள், முன்னோடிப் பரீட்சைகளை நடாத்துதல், எதிர்பார்க்கப்படும் வினாக்கள் உள்ளிட்டவற்றை அச்சிடல், விநியோகித்தல், இவ்வாறானவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடல் போன்றனவும் பரீட்சைகள் திணைக்களத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது.
குறித்த விதிமுறைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவ்வாறான விடயங்களில் ஈடுபடுவோர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.