Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உயர் தரப் பரீட்சை குறித்த புதிய தீர்மானத்துக்கு எதிர்ப்பு

August 2, 2018
in News, Politics, World
0
உயர் தரப் பரீட்சை குறித்த புதிய தீர்மானத்துக்கு எதிர்ப்பு

உயர் தரப் பரீட்சை நிலையங்களுக்கு, மேலதிகமாக ஒரு நிலையப் பொறுப்பதிகாரியாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியொருவரை சேவையில் அமர்த்த பரீட்சைகள் திணைக்களம் முன்னெடுத்துள்ள தீர்மானத்துக்கு கல்வித்துறையிலுள்ள சகல தொழிற்சங்கங்களும் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

கல்வித் துறையில் அதிகாரிகள் தேவையான அளவு காணப்படும் நிலையில் மேலதிக நிலையப் பொறுப்பதிகாரியாக இராணுவ வீரர் ஒருவரை நியமிப்பதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது எனவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக நிலையப் பொறுப்பதிகாரிகளாக தற்பொழுது நியமனம் செய்யப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் நிலையப் பொறுப்பதிகாரிளுக்கு உத்தரவுகளை தற்பொழுது முதலே உத்தரவுகளை இட ஆரம்பித்துள்ளதாக நிலையப் பொறுப்பதிகாரிகளா நியமிக்கப்பட்டுள்ளவர்களிடமிருந்து விஷனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அச்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் 13 தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (02) பரீட்சைகள் ஆணையாளருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அனைத்து தொழிற்சங்கங்களினதும் வேண்டுகோளின் பேரில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயர் தரப் பரீட்சைக்கு 2268 மேலதிக நிலையப் பொறுப்பதிகாரிகளை நியமிக்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

யாழ். கோட்டை குறித்து வெளியான செய்தி பொய்

Next Post

விஜயகலா மஹேஷ்வரனின் அறிக்கை இன்று அல்லது நாளை

Next Post
விஜயகலா மஹேஷ்வரனின் அறிக்கை இன்று அல்லது நாளை

விஜயகலா மஹேஷ்வரனின் அறிக்கை இன்று அல்லது நாளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures