2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் கோர ஆரம்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று சனிக்கிழமை (08) அறிவித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணிகள் வெள்ளிக்கிழமை (07) ஆரம்பமாகியுள்ளதாகவும் ஜூலை 28ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, விண்ணப்பதாரர்கள் இணையவழி ஊடாக மாத்திரமே தமது விண்ணப்பத்தை செலுத்த முடியும் எனவும், www.doenets.lk, www.onlineexams.gov.lk/eic ஆகிய திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலோ அல்லது கையடக்கத்தொலைபேசி மூலம் உள்நுழையுமாறு விண்ணப்பதாரர்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
இது குறித்து மேலதிக தகவல்களை 1911 என்ற துரித அழைப்பு இலக்கத்திற்கோ அல்லது, 011 2784 208 / 011 2784 537 / 011 2786 616 முதலான இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.