குண்டுத் தாக்குதல் மேற்கொண்டு பலரைக் கொலை செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட உமர் ஹபிதாபியை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 31 பேரை குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு கொலை செய்து, மேலும் 60 பேரை காயமடைய செய்த சம்பவம் தெடர்பிலையே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம், எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்தது.
வழக்குத் தாக்கல் செய்த தரப்பும் மற்றும் பிரதிவாதிகள் தரப்பும் வழக்கு விசாரணை செய்யப்படும் தினத்தில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதின்றம் அறிவித்தது