யாழ்.கோண்டாவில்- உப்புமடம் சந்தியில் ரவுடிகளின் வாள்வெட்டுக்கு இலக்கான இரும்பக உாிமையாளா் உயிாிழந்துள்ளாா்.
குறித்த இரும்பக உரிமையாளர் வாள்வெட்டுக்கு இலக்காகி 3 வாரங்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிற்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடா்பாக கோப்பாய் பொலிஸாா் எந்தவொரு நடவடிக்கையினையும் இதுவரை எடுக்கவில்லை என உறவினா்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளரான 47 வயதுடைய கந்தையா கேதீஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் கடந்த 6ஆம் திகதி மாலை இடம்பெற்றிருந்தது.
இரண்டு மோட்டார் சைக்கிளில் வசென்ற கும்பல் ஒன்று இரும்பகத்துக்குள் புகுந்து அதன் உரிமையாளரை கண்மூடித்தனமாகத் தாக்கியதோடு, கடைக்குள்ளும் தாக்குதல் நடத்திய பின்னர் தப்பித்து சென்றிருந்தது.
தலையில் படுகாயமடைந்த உரிமையாளர் , யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று கோப்பாய் பொலிஸார் இரும்பகத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டபோதும் , உரிமையாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட மரக்கட்டையை சான்றுப்பொருளாக எடுத்துச் செல்ல பொலிஸார் மறுப்புத் தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
எனினும் நேற்றையதினம் உரிமையாளர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது உறவினர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு கோப்பாய் பொலிஸார் முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக உறவினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

