விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் உத்தியோக பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இராஜகிரியவிலுள்ள விவசாய அமைச்சில் நேற்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.
விவசாயிகளின் உன்னதமான கனவுகள் நனவாக போகங்கள் பொய்க்காமல் பொருளாதார வளத்தை பெருக்கி தன்னிறைவடைந்த இலங்கையராக பெருமிதம் அடைவோம் என்று கடமைகளைப் பொறுப்பேற்ற விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா , பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் , பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் அமைச்சின் செயலாளர்கள், விவசாய அமைச்சின் திணைக்கள தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் விவசாய பிரதி அமைச்சரின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.