குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில் அங்கு இணையத்தள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த இணைய சேவை முடக்கம் நாளை (புதன்கிழமை) காலை 8 மணி வரை நீடிக்கும் என மாவட்ட குறித்த துறை அதிகாரி அபிஷேக் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், உத்தர பிரதேசத்திலும் பல்வேறு இடங்களில் போரட்டங்கள் நடைபெற்றன.
லக்னோ உள்ளிட்ட இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது.
இந்த வன்முறைச் சம்பவங்களில் 15 பேர் உயிரிழந்தனர். இதனால், உத்தரப் பிரதேசத்தில் பதற்றம் அதிகரித்ததால் வதந்திகள் பரவாமல் தடுப்பதற்காக லக்னோ உள்ளிட்ட இடங்களில் இணையத்தள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

