சமுர்த்தி வங்கியில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் கத்தியால் வெட்டப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவு துன்னாலையில் இடம்பெற்றுள்ளது. துன்னாலையில் உள்ள சமுர்த்தி வங்கியின் பாதுகாப்புப் பணியாளரே இவ்வாறு காயமடைந்தார்.
சமுர்த்தி வங்கியின் பின்பக்க மதிலால் உள்ளே பாய்ந்து வந்த நால்வரே இவ்வாறு தாக்குலை மேற்கொண்டுள்ளனர். பணியாளரின் அலை பேசியையும் பறித்துச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த பணியாளர் மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டனர். குற்றத் தடயவியல் பொலி ஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளில் ஈடுபட்டிருந்தனர்.

