Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உதித்தது வண்ணத் தமிழ் வானொலி

April 30, 2016
in News
0

உதித்தது வண்ணத் தமிழ் வானொலி
ஏராளமான மக்கள் அணிதிரண்டு தங்களுடைய வாழ்த்து செய்திகளை வானொலியிலும் நேரிலும் தெரிவிப்பு
நேயர்கள் மத்தியில் குதுகலம்Presentation1

நேற்றைய தினம் வண்ணத் தமிழ் வானொலி என்ற றேடியோ வானொலி நிலையம் சம்பிரதாயமாக திறந்து வைக்கப்பட்டது. நிலையத்திற்கு நுழைந்த நான் பிரதான அலுவலகம் அமைந்த பகுதியை நோக்கி நுழைய மிக சிரமப்பட வேண்டிய நிர்க்கதியில் இருந்ததற்கு பிரதான காரணம் ஏராளமான நேயர்களின் வருகையாகும். வானொலித் துறையில் பல வருட அனுபவமுள்ள திரு கணேஷன் மற்றும் ஸ்ரீ சிவசுப்ரமணியம் ஆகியோர் இன்முகத்துடன் விருந்தினர்களையும் நேயர்களையும் வரவேற்றுக்கொண்டு இருந்தனர். சகலருக்கும் திருமதி சிவசுப்ரமணியம் அவர்கள் சிற்றுண்டி வகைகள் மற்றும் குளிர் சூடான பானங்கள் என பலதையும் வழங்கி உற்சாகம் கலந்த சந்தோசத்தினை ஏற்படுத்தினார்கள். பிரதான ஒலிபரப்பு அறையினுள் நுழைந்தேன். கடமையில் சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளர்கள் செந்தில்நாதன் மற்றும் கங்காதரன் ஆகியோருடன் புதிதாக உள்வாங்கப்பட்ட பெண் வானொலி அறிவிப்பாளர்கள் இருவரும் கடமையில் இருந்ததனை அவதானித்தேன். நானும் எனது வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டேன். செந்தில்நாதன் மற்றும் கங்காதரன் ஆகியோர் மிகவும் சிறப்பாக உசாராக நிகழ்வுகளை அசத்தலாக நகர்த்தி சென்றதனை அவதானித்தேன். சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளர்கள் பி எஸ் சுதாகரன், ரஜீவன், சத்தியன், மயூரன், விஜிதா ஆகியோரோயும் கலந்துரையாடுவதற்கு சந்தர்பம் கிட்டியது. அவர்களுக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்தேன். நிலையத்தில் இருந்து விலகி சென்றபோது ஒரு தொழில் அதிபர் என்னை அணுகி எனது குரலினை அதாவது எனது வாழ்த்து செய்தியினை வண்ணத் தமிழ் வானொலியில் கேட்டு தான் இன்புற்றதாகவும் மிகவும் சிறப்பான அலைவரிசைஎனவும் மிகவும் துல்லியமாக கேட்க கூடியதாக இருப்பதாகவும் கூறி தங்களது சந்தோசத்தினை வெளிப்படுத்தினார்கள். வண்ணத் தமிழ் வானொலி மென் மேலும் வளர்ந்துவர வாழ்த்துக்கள்.

Previous Post

Next Post

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures