சிறப்பு அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி, உதவி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் இன்று சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
41 வருடங்களாக பொலிஸ் சேவையாற்றிய நிலையில் அவர் இன்று ஓய்வு பெறுகிறார்.
2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் திகதியன்று அவர் சிறப்பு அதிரடிப்படையின் பொறுப்பதிகாரியாக பதவியேற்றார்.
கடந்த வருடம் பெப்ரவரி 5ஆம் திகதி சேவையில் இருந்து அவர் ஓய்வு பெறவிருந்த போதும் ஒரு வருடத்துக்கு சேவை நீடிப்பு செய்யப்பட்டது.
1979ஆம் ஆண்டு பொலிஸில் உதவி கான்ஸ்டபிளாக சேர்ந்த அவர் சிறப்பு அதிரப்படையில் 1984ஆம் ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி இணைந்தார்.
41 வருட சேவையில் லத்தீப் பயங்கரவாத விசாரணை பிரிவின் பணிப்பாளர் மற்றும் முக்கியஸ்தர், பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் போன்ற பதவிகளை வகித்தார்.
இவரின் தலைமையில் ஹெரோய்ன் மற்றும் கஞ்சா போதைப்பொருட்கள் சுமார் 1000 கிலோகிராம் வரையில் கைப்பற்றப்பட்டன.
இதில் தெஹிவளையில் கைப்பற்றப்பட்ட 3336 மில்லியன் பெறுமதியான 278 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டமையும் உள்ளடங்கும்.
