2009 வன்னி போரின் பின்னர் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில் குடியிருந்த கணவனை இழந்த ஊடகவியலாளர் குடும்பம் ஒன்றுக்கு தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்கள் வாழ்வாதார உதவியாக பசு மாடு ஒன்றை 2013 ஆம் ஆண்டு வழங்கியுள்ளார் இதன்காரணமாக அந்த ஊடகவியலாளரின் குரலை நசுக்குவதற்கு சரவணபவானின் உதவியாளர் முயற்சிப்பதாக அந்த பெண் ஊடகவியலாளரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது .
குறிப்பிட்ட உதவியை பெற்றுக்கொண்டமையால் சரவணபவன் பற்றிய அரசியல் விமர்சனங்களை அவர் முன்வைக்க கூடாது என்றும், அவரால் முகநூலில் போடப்பட்ட பதிவை நீக்கும் படியும் நீக்கும்வரை தன்னால் இத்தகைய செயற்பாடுகள் தொடரும் எனவும் சரவணபவனின் உதவியாளர் க .குணாளன் மிக கடுமையான கீழ்த்தரமான வார்த்தைகளால் பெண் ஊடகவியலாளரை விமர்சித்துள்ளார் .
இதன் காரணமாக சரவணபவனிடம் தான் பெற்றுக்கொண்ட உதவியை மீள வழங்கப்போவதாக ஊடகவியலாளர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார் .

