பாரிய வாகன விபத்தில் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் இரசாயனவியல் விரிவுரையாளர் பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூரில் இடம்பெற்ற வீதி விபத்திலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தை வீதி, செங்கலடியைச் சேர்ந்த 48 வயதுடைய கந்தக்குட்டி கோமளேஸ்வரன் என்பவரே பலியாகியுள்ளார்.
இன்று காலை கடமைக்காக மட்டக்களப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வீதியால் சென்றுகொண்டிருந்த பயணிகள் பஸ் ஒன்றினால் மோதுண்டு ஸ்தலத்திலேயே உடல் சிதறி பலியாகியுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸைக் கைப்பற்றி பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுவந்துள்ள பொலிஸார் அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.