காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
காவிரி தீர்ப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாகக் கூறியுள்ளார். இறுதித் தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மறு பரிசீலனை மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.