செய்ன் நதியானது பரிசிற்குள தனது உச்ச நீர் மட்டத்தினை எடடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 29ம் திகதி ஜனவரி மாதம், செய்ன் நதி 5.85 மீற்றரை எட்டியுள்ளது. இது கடந்த 2016ம் ஆண்டு அபாயம் என அறிவிக்கப்பட்ட உயரத்தை விடக் குறைவானதாகவே உள்ளது. கடந்த 2016 ஜுனில் செய்நதியின் நீர் மட்டம் 6.10 மீற்றரை எட்டியிருந்தது. ஆனாலும் இது தான் எச்சம் என இன்று தெரிவத்துள்ளமையும் தற்காலிகமானதே என வெள்ள எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
செய்ன் நதியின் நீர்மட்டத்தைக் குறைப்பதற்காக, நீரை வெளியேற்றும் நடவடிக்கை நாளை செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாக உள்ளது. ஆனால் இது மிகவும் மெதுவாகப் பலநாட்கள் செய்யப்படும் நடவடிக்கையாகும்.
இருப்பினும் RER-C பெப்ரவரி 5ம் திகதி வரை மூடப்பட்டே இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதே நேரம் பரிசிற்கும் பரிசின் புறநகரப்பகுதிகளிற்குமான செம்மஞ்சள் வெள்ளஎச்சரிக்கையும் தொடர்ந்தும் பேணப்படுகின்றது.