உக்ரைன் யுத்தத்தை ரஸ்யா நிறுத்தவேண்டும் என சீனா அழுத்தம் கொடு;க்கவேண்டும் என அவுஸ்திரேலியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிங்கப்பூரில் உரையாற்றிய அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வொங் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்
.
சீனா ரஸ்யாவிடம் தனக்குள்ள சிறந்த செல்வாக்கை பயன்படுத்தி யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான பரப்புரையில் ஈடுபடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.செல்வாக்கு மிக்க வலுவான நாடுகள்யுத்தத்தை நிறுத்துவதற்கான அழுத்தத்தை புட்டின் மீது கொடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதில் சீனாவும் இடம்பெறவேண்டும்,வல்லரசு நாடு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்புரிமை பெற்ற நாடு – ரஸ்யாவுடன் எல்லையற்ற கூட்டுப்பங்காண்மையை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்யா மீது சீனா அழுத்தங்களை கொடுப்பது எங்கள் பிராந்தியத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு பெருமளவு உதவும் எங்கள் பிராந்தியமும் உலகமும் ரஸ்யா தொடர்பில் சீனா எவ்வாறு செயற்படுகின்றது என்பதை உன்னிப்பாக அவதானித்த வண்ணமுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.