Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உக்ரேனில் பெண் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு

March 17, 2022
in News, World
0
25 இலட்சம் பேர் உக்ரேனிலிருந்து அகதிகளாக வெளியேற்றம்

உக்ரேனில் தனியார் செய்தி நிறுவனத்தின் பெண் செய்தியாளர் சாஷா என்று அழைக்கப்படும் அலெக்ஸாண்ட்ரா  குவ்ஷினோவ் மற்றும் ஒளிப்பதிவாளர் பியர் ஜாக்ர்ஸெவஸ்கி ஆகியோர் உக்ரேன் தலைநகர் கீவ் நகருக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவத்தில் இங்கிலாந்தை சேர்ந்த பெஞ்சமின் ஹால் என்ற செய்தியாளர் காயமடைந்த நிலையில் உக்ரேன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மூவரும் போர் செய்தி சேகரிப்புக்காக பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அவர்களது வாகனம்  போரின் போது இடம்பெற்ற தாக்குதலால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியது.

இதில் சாஷா என்று அழைக்கப்படும் அலெக்ஸாண்ட்ரா  குவ்ஷினோவ் மற்றும் ஒளிப்பதிவாளர் பியர் ஜாக்ர்ஸெவஸ்கி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், அவர்களுடன் பயணம் மேற்கொண்டிருந்த  இங்கிலாந்தை சேர்ந்த பெஞ்சமின் ஹால் என்ற செய்தியாளர் காயமடைந்த நிலையில், உக்ரேன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லண்டனைச் சேர்ந்த தனியார் செய்தி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளரான பியர் ஜொக்ர்ஸெவஸ்கி கடந்த பெப்ரவரி மாதம் முதல் உக்ரேனில் பணிபுரிந்து வந்துள்ளார்.

உக்ரேன் மீது ரஷ்ய படையினர் கடந்த 20 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது.

ரஷ்யா மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. இருந்த போதும் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதேவேளை, ஏற்கனவே ஆவணப்படத் தயாரிப்பாளரான ப்ரென்ட் ரெனாட், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

இதனிடையே, உக்ரைன் போர் ஆரம்பித்த காலத்தில் இருந்து இதுவரை 97 குழந்தைகள் கொல்லப்பட்டதாக உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரேனின் மரியுபோல் நகரில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

இங்கிலாந்தில் இரத்தாகிறது பயண கட்டுப்பாடுகள்

Next Post

Explore Morocco’s Desert and Seaside With These Stunning 35mm Images

Next Post

Explore Morocco's Desert and Seaside With These Stunning 35mm Images

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures