உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் நடந்த இரட்டை தற்கொலை குண்டுவெடிப்புகளில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 33 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக நடந்த தாக்குதல்களில் அண்மைய தாக்குதல் இது என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
செவ்வாய் கிழமை ஒன்றன்பின் ஒன்றாக மூன்று நிமிடங்களுக்குள் இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன.
மூன்று தற்கொலை குண்டுதாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் செய்தி தொடர்பாளர் பிரெட் எனங்கா செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதில் ஒன்று பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் உள்ள வீதியிலும் மற்றொன்று பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலும் வெடித்துள்ளது.
மத்திய ஆபிரிக்காவில் உள்ள இஸ்லாமிய அரசின் (ISIS) துணை அமைப்பான Allied Democratic Forces (ADF) உடன் இணைந்த உள்நாட்டுக் குழு இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாக தாங்கள் நம்புவதாக பொலிஸார் ஆரம்பத்தில் சந்தேகம் வெளியிட்டனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]