நடிகர் ‘கயல்’ வின்சென்ட் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘அந்தோணி’ எனும் ஈழ தமிழ் மண் பின்னணியில் ஈழ தமிழ் கலைஞர்களுடன் இணைந்து உருவாகும் திரைப்படத்திற்கு ‘உலகம் போற்றும் சிம்பொனி நாயகன்’ இசை ஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்ற தகவலை படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்துடன் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர்கள் சுகிர்தன் கிறிஸ்துராஜா & ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இருவரும் இணைந்து இயக்கி வரும் ‘அந்தோணி ‘எனும் திரைப்படத்தில் கயல் வின்சென்ட் , டிஜே பானு , நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன்.ஆர், சௌமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்தை ஓசை பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கலை வளரி சக ரமணா மற்றும் சுகந்தினி ரமணதாஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
ஈழ மண்ணில் உருவாகும் ஒரு படைப்பிற்கு இசை ஞானி இளையராஜா இசையமைக்க சம்மதம் தெரிவித்தார் என்றதும்.. மகிழ்ச்சியில் துள்ளி குதித்தோம் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜாவின் பங்களிப்பின் காரணமாக ‘அந்தோணி ‘ படத்தின் மீதான எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் உயர்ந்திருக்கிறது.