ஈராக் தலைநகர் பாக்தாதிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஈரானின் புரட்சி பாதுகாப்பு படைப் பிரிவின் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம் நியாயம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி முதல் லண்டன் வரை நடந்த பயங்கரவாத சதிகளில் குவாசிம் சுலைமானிக்கு பங்கு இருந்தது என டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தின் ஆட்சி முடிந்துவிட்டது. குவாசிம் சுலைமானிக்கு புதுடெல்லி மற்றும் லண்டன் வரை நடந்த பயங்கரவாத சதிகளில் பங்கு இருந்தது.
ஈராக்கிலுள்ள அமெரிக்க இலக்குகள் மீதான அண்மைக்கால தாக்குதல் அனைத்தினதும் பின்னால் தளபதி சுலைமானி இருந்ததாகவும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா நேற்று நடாத்திய தாக்குதலை, இதற்கு முன்னரே செய்திருந்தால், நிறைய உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சுலைமானி கொல்லப்பட்டது போருக்கு வழிவகுக்காது. ஈரானிய மக்கள் மீது எனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு. அவர்கள் நம்பமுடியாத பாரம்பரியமும் வரம்பற்ற ஆற்றலும் கொண்ட குறிப்பிடத்தக்க மக்கள்.
நாங்கள் ஆட்சி மாற்றத்தை நாடவில்லை. ஒரு போரை நிறுத்த நடவடிக்கை எடுத்தோம். போரைத் தொடங்க நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் டிரம்ப் கூறியுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

