ஈரானுக்கு உத்தியோகபுர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு ஜனாதிபதி ஹஸன் ரொஹானியை நேற்று (13) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
இவர்களுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இரு நாடுகளுக்குமிடையிலான ஐந்து புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

