ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி 3 நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லி வருகிறார். இந்த பயணத்தின் போது இரு தரப்பு உறவுகள் பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. ஈரானில் சாபஹார் துறைமுகம் அமைக்கும் திட்டத்தை இந்தியா இணைந்து செயல்படுத்தி வருகிறது.
இதன் மூலம் பாகிஸ்தானுக்கு செல்லாமலேயே, ஆப்கானிஸ்தான் போன்ற மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தக உறவை இந்தியா வைத்துக் கொள்ள முடியும். மிகவும் முக்கியத்துவம் உள்ள சாபஹார் துறைமுகத்தின் முதற்கட்டப் பணிகள் முடிந்து 2017 டிசம்பரில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.