ஈரானைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் வாஹித் சயாதி நசிரி தனது 60 நாள் உண்ணாநிலை போராட்டத்தில் மரணமடைந்தார்.
ஈரானைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் வாஹித் சயாதி நசிரி கடந்த 2015ஆம் ஆண்டு சமூக வலைத்தளம் ஒன்றில் அந்நாட்டின் தலைவரை விமர்சித்ததற்காகவும், நாட்டிற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டதாக கூறியும் அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. பின்பு அவர் மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
இவர் மறுபடியும் கடந்த ஆகஸ்ட் மாதம் அதேபோன்று நாட்டின் உயர் தலைவரை விமர்சித்து எழுதியதற்காக மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் சிறையினுள் இருந்தபடியே தன்னை மற்றொரு சிறைக்கு மாற்றும்படி உண்ணாநிலை போராட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் துவங்கினார். இந்நிலையில் கடந்த 60 நாட்களாக உணவு உண்ணாமல் தனது போராட்டத்தை தொடர்ந்து வந்த வாஹித் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வாஹித் அவரின் குடும்பத்தாருக்கு அவரின் மரணம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

