ஈரானில் பொருளாதார சீர்குலைவை கண்டித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதில் ஏற்பட்ட கலவரத்தில் 12 பேர் கொல்லப்பட்டதால் கலவரம் நாடு முழுவதும் பரவியது.
ஈரான் அதிபராக ஹூசைன் ரவுகானி உள்ளார். இந்நாட்டில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் நடந்தது முதல் அங்கு அவ்வப்போது கலவரம் வன்முறை வெடித்து வந்தது. இ்ந்நிலையில் அதிபர் ரவுகானியின் ஆட்சியில் அத்யாவசிய பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டதாக கடந்த ஞாயிறன்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர்.இந்நிலையில் இன்று நடந்த போரட்டம் வன்முறையாக மாறியதில் 12 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து வன்முறை 12 மாகாணங்களில் பரவியதால் வங்கிகள், அரசு அலுவலகங்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். கலவரத்தை அடுத்து சமூக வலைதளங்களை ஈரான் அரசு முடக்கியுள்ளது.