அமெரிக்கா மீதான ஈரானின் பதில் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானின் மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
இந்த வகையில், ஈரானின் உற்பத்தி,சுரங்கம், நகை போன்ற துறைகள் பலவற்றுக்கும் அமெரிக்காவின் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீதான ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா இந்த தடையை விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

