சட்டவிரோதமாக ஈரானுக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் குழந்தை ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஈரானுக்குள் நுழைய முற்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டுக் குடிமகன் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த காலங்களில் ஈரானுக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முற்பட்ட மத்திய ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் அஜர்பைஜியின் எல்லைப் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.