இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் புதிதாக அழைப்பு கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.
முதல் தர கழகங்களில் இடம்பெறாத வீரர்கள் மாத்திரமே இந்த சுற்றுப் போட்டியில் பங்குபற்ற அனுமதிக்கப்படுவர்.
பிரதான கழங்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இருந்து தரமிறக்கப்பட்டு ஆளுநர் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பங்குபற்றிவரும் கழகங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் இந்த சுற்றுப் போட்டியில் 23 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாட உள்ளனர்.
இந்த சுற்றுப் போட்டி ஸ்ரீலங்கா கிரிக்கெட் 23 வயதுக்குட்பட்ட அழைப்பு கழகங்கள் 50 ஓவர் சுற்றுப் போட்டி என பெயரிடப்பட்டுள்ளது.
நூற்றாண்டுக்கும் மேல் பழைமைவாய்ந்த டிம்புள அத்லெட்டிக் அண்ட் அத்லெட்டிக் க்ளப் அணியும் பங்குபற்ற உள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த சுற்றுப் போட்டி வெற்றி அளிக்கும் பட்சத்தில் வருடாந்தம் நடத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானிக்கும்.
சரியாக 30 தினங்களில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த சுற்றுப் போட்டியில் 18 கழகங்கள் 2 குழுக்களில் பங்குபற்றுவதுடன் மொத்தமாக 72 லீக் போட்டிகள் நடைபெறும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இடங்களைப் பெறும் அணிகள் மார்ச் 26ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெறும்.
அழைக்கப்பட்டுள்ள அணிகள்
ஏ குழு: மலே சிசி, லியோஸ் சிசி, குருநாகல் எஸ்சி, டிம்புள ஏ அண்ட் சிசி, ரஜரட்ட சிசி, இரத்தினபுரி சிசி, சரசென்ஸ் சிசி, லங்கன்ஸ் சிசி, கண்டி சிசி. (32 போட்டிகள்)
பி குழு: மொறட்டுவை சிசி, ஓல்ட் தர்மபாலியன்ஸ் எஸ்சி, ரியோ எஸ்சி, சிங்க எஸ்சி, யுனைட்டட் சதர்ன் எஸ்சி, களுத்துறை பிசிசி, களுத்துறை டிசி, ஜெஸ்டோ சிசி, அன்டோனியன்ஸ் எஸ்சி. (32 போட்டிகள்)