யாழ் இளவாலை வடக்கில் தோட்டக் காணி ஒன்றை உழவு செய்யும் போது, நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த வெடிபொருள்கள்நேற்று கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவை தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் குறித்த வெடிபொருட்கள் தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய து என்றும் அவை பொதி செய்யப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
சிறப்பு அதிரடிப் படையினரின் உதவியுடன் நாளை குறித்த வெடிபொருள்கள் மீட்கப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

