சென்னை அம்பத்தூரில் இளம்பெண்ணிடம் நகை, பணம் மோசடி செய்த புகாரில் விக்னேஷ்வர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேஸ்புக் தொடர்பு மூலம் ஐ.டி. பெண் ஊழியரிடம் 25 சவரன் நகை, 2.5 லட்சத்தை ஏமாற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் சாலிகிராமத்தை சேர்ந்த விக்னேஷ்வர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

