இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் உள்ளிட்ட இரு நபர்கள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் போகுந்தர விவசாய சேவை மத்திய நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வயல் காணியொன்றை நிரப்புவதற்காக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதற்காக நபரொருவரிடம் 20,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக குறித்த அதிகாரி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த தொகையில் 10,000 ரூபாவினை பெரும் வேளையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.