லண்டனில் இருந்து கொழும்பு பயணித்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது
ஜேர்மன் frankfurt விமான நிலையத்தில் குறித்த விமமான தரையிறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
268 பயணிகளுடன் வந்த விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
பயணி ஒருவருக்கு ஏற்பட்டுள்ள திடீர் சுகயீனம் காரணமாக இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரையிறக்கப்பட்ட இதுவரை விமான அங்கு இருந்து புறப்படவில்லை என்பதுடன் விமானத்தில் உள்ள பயணிகளுக்கு தேவையானவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.