ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத் (FIFA) தலைவர் ஜியோவன்னி இன்பன்டீனோ இன்று இலங்கை வந்துள்ளார்.
அவருடன் பிபாவின் ஐந்து அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர். கட்டாரின், தோஹாவிலிருந்து புறப்பட்ட அவர்கள், இன்று காலை 08.15 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண சர்வதேச அழைப்பு கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டியில் ஜியோவன்னி இன்பன்டீனோ விசேட அதிதியாக பங்கெடுக்கவுள்ளார்.
இறுதிப் போட்டி இன்றிரவு 7.00 மணிக்கு கொழும்பு, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சிஷெல்ஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் ஆரம்பமாகவுள்ளது. இந்த குழுவினர் தமது வருகையினை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் பின்னர் நாளை இலங்கையிலிருந்து புறப்படவுள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]