இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் இந்த பெறுமதி அதிகரித்திருந்ததாத ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி ரூபா 152.60 சதமாக விற்பனையாகி, ரூபா 152.45 சதமாக நிறைவடைந்தது.
நேற்றையதினம் இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி 152.65 சதமாக நிலவியது.
இறக்குமதியாளர்கள் மத்தியில் டொலருக்கான கேள்வி குறைவடைந்தமையே இதற்கான காரணமாகும்.
எவ்வாறாயினும் இந்த ஆண்டு இலங்கை நாணயத்தின் டொலருக்கு நிகரான பெறுமதி 1.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

