தமது நாட்டிற்குள் சட்டவிரோதமான முறையில் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு முறையான ஆவணங்களுடன் கூடிய சரியான தொழில்களை வழங்குவதற்கு லெபனான் அரசு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
லெபனான் நாட்டின் பிரதமர் ஸாத் ஹரீரியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாட்டுக்கு வந்ததாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்

