Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கை த‌மிழ் மாற்றுத் திறனாளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி – 2016!

July 25, 2016
in News, Sports
0
இலங்கை த‌மிழ் மாற்றுத் திறனாளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி – 2016!

இலங்கை த‌மிழ் மாற்றுத் திறனாளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி – 2016!

இலங்கையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் இனம் காண. அவர்களது திறமைகள் மற்றும் தேவைகளை இனம் காண. தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு, த‌மிழ் மாற்றுத் திறனாளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளது.

இதுகுறித்து தமிழ் மாற்றித் திறனாளிகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை, தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினால் – Differently Able Tamils Association (DATA ) மாற்றுத்திறனாளிகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள் இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்படுகின்றது.

வடமாகாணத்தின் போட்டிகள் வவுனியா மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்தின் போட்டிகள் மட்டக்களப்பிலும் நடாத்தப்படுகின்றது.

இப்போட்டிகள் ஆவணி/ புரட்டாதி மாதத்தில் நடாத்தப்படும், தமிழ் மாற்றுத்திறனாளிகளையும், தமிழ் மாற்றுத்திறனாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களையும் ஒருங்கிணைக்குமுகமாக “தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு” உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் உயிரிழை, மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சம்மேளனம் ஆகியவை தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பில் இணைகின்றன. தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் அங்கத்தவர்களாக தமிழ் மாற்றுத் திறனாளிகளே இருப்பர். அதன் நிறைவேற்றுக் குழுவிலும் தமிழ் மாற்றுத் திறனாளிகளே இருப்பர்.

தற்போதைய நிலையில் வடக்கு மாகாணப்போட்டிகள் அனைத்தும் உயிரிழையின் ஒருங்கிணைப்பிலும், கிழக்கு மாகாணத்தின் போட்டிகள் அனைத்தும் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பிலும் நடைபெறும்.

போட்டிகள்:

மாற்றுத் திறனாளிகளுக்கு பொருத்தமான விளையாட்டு போட்டிகள் தேர்வு செய்யப்படும். விளையாட்டு அலுவலகர்கள், மருத்துவர்களின் வழிகாட்டுதலில் போட்டிகள் தேர்வு செய்யப்படும். அவ்வாறான போட்டிகளுக்கு போட்டியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

போட்டியாளர்கள்:

வடக்கு கிழக்கில் வாழும் அனைத்து மாற்றுத் திறனாளிகளும் அழைக்கப்படுவர். மாகாண, மாவட்ட விளையாட்டு அலுவலகர்கள், மருத்துவர்கள் இப்போட்டிகளை மேற்பார்வை செய்வார்கள்.

தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு முன் உள்ள சவால்கள்:

எமக்கு முன் உள்ள மிகப்பெரும் சவால் – நிதி. இந்த விளையாட்டுப் போட்டியை நடாத்த நாம் நிதி சேகரிக்க உள்ளோம். எமது முயற்சியை எம் உறவுகள் நிச்சயம் வரவேற்பார்கள் என்பதில் எமக்கு எள்ளளவு சந்தேகமும் இல்லை.

இதுவரை எம்மை ஊக்கப்படுத்தியவர்கள் எமது புதிய முயற்சியையும் ஊக்கப்படுத்துவார்கள் என நாம் திடமாக நம்புகின்றோம்.

அடுத்த சவால் – மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தி அவர்களை வெளிக்கொணர்தல், அவர்களுக்கான போக்குவரத்து என்பன முக்கியமான பிரச்சனைகளாக இருக்கும்.

நாங்கள் இவ்வாறான பல போட்டிகளில் முன்னர் பங்கேற்றிருக்கின்றோம் அதேபோல நாம் கட‌ந்த வருடம் ஒரு விளையாட்டுப்போட்டியை ஏற்பாடு செய்தோம், அதில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் மட்டும் கலந்து கொண்டனர்.

சக்கர நாற்காலி, மரதன் ஓட்டம், சக்கர நாட்காளி கூடைப்பந்து போட்டிகள் நடாத்தினோம். இம்முறை நாம் அனைவரும் பங்கு கொள்ளும் விதமாக ஓர் விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்கின்றோம்

ஆரம்பதில் தமிழர்களுக்கான விளையாட்டாக நடாத்தப்பட்டு , இனம் காணப்படும் வீரர்கள் தேசிய , சர்வதேச மட்ட போட்டிகளில் பங்கு பற்ற வழி வகை செய்யயும் நோக்கோடு இந்த முயற்சிகளை எடுக்கின்றோம்.

தமிழ் மாற்றுத் திறனாளிகளுக்கிடையிலான கலை போட்டி விளையாட்டு தவிர்ந்த ஏனைய திறமைகளை வெளிப்படுத்த உதவும் போட்டிகள் இனி வரும் காலங்களில் நடாத்தப்படும். குறிப்பாக கலைகளை வழக்கும் போட்டிகள் விரைவில் ஒழுங்கு செய்யப்படும்

சாதனையாளார் கெளரவிப்பு:

துன்பத்திற்கு துன்பம் கொடுங்கள் என டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறியது போல துன்பம் மிகுந்த வாழ்விலும் அந்த துன்பத்தை தாண்டி சாதனை செய்வோர் இந்த விழாவில் சிறப்பு செய்யப்படுவார்கள்.

இப்போட்டியின் மூலம் நீங்கள் என்ன இலக்கை அடைய விரும்புகின்றீர்கள் ?

நாம் இப்போட்டியினை நடாத்துவதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் இனம் காணப்படுவார்கள். அவர்களது திறமைகள் இனம் காணப்படும் அவர்களது தேவைகள் இனம் காணப்படும்.

மாற்றுத் திறனாளிகள் தொடர்பான ஒரு தகவல் திரட்டு உருவாக்கப்படும் அதன் மூலம் எமக்கு கிடைக்கும் உதவிகள் அனைத்தும் மிகவும் தேவையில் உள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடியதாக இருக்கும்

எங்களோடு இணையுங்கள்:

“நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்” என பாரதி கூறியதைப்போல உங்களால் முடியுமான பங்களிப்பை செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

உங்கள் வியாபார ஸ்தாபனங்களின் விளம்பரங்களை இந்த போட்டிகளுக்கு தாருங்கள் –

ஒவ்வொரு போட்டிகளுக்கும் நீங்கள் அனுசரனை வழங்கவேண்டுமென நாம் கேட்டுக் கொள்கின்றோம். அதேவேளை நிதி தரக்கூடிய வழி வகைகள் அனைத்தும் எமது உத்தியோக பூர்வ இணையத்தில் காணலாம்.

நாங்கள் திரட்டும் பணம் இந்த விளையாட்டு போட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் அத்தோடு மாற்றுத் திறனாளிகளை நிர்வாக ரீதியில் வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படும். மீதமான பணம் அனைத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கு பின்வரும் வரிசையில் பயன்படுத்தப்படும்.

சிறுதுளிதிட்டம் : முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மாதம் ரூபா 10,000 கொடுப்பனவு திட்டத்துக்கு பயன்படுத்தப்படும்

நம்பிக்கை திட்டம் : ஒன்றுக்கு மேற்பட்ட அங்கப்பதிப்புக்கு உட்பட்டவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக ரூ 5000.00

பராமரிப்பு திட்டம் : அங்கம் பாதிக்கப்பட்ட சிறார்கள் பராமரிப்பும், பெற்றோரை இழந்த சிறார்கள் பராமரிப்புக்குமாக பயன்படுத்தப்படும்.

பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகி கல்வி கற்கும் தமிழ் மாற்றுத் திறனாளிகளின் சாதனையை ஊக்குவிக்க அவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

கடும் கோபமடைந்த கும்பளே

Next Post

பாகிஸ்தானை பழி தீர்த்த இங்கிலாந்து: 2வது டெஸ்டில் 330 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

Next Post
பாகிஸ்தானை பழி தீர்த்த இங்கிலாந்து: 2வது டெஸ்டில் 330 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

பாகிஸ்தானை பழி தீர்த்த இங்கிலாந்து: 2வது டெஸ்டில் 330 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures