இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் சிலர் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களைச் சந்தித்தனர்.
தற்போதுள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தான் ஆதரவு தெரிவிப்பதாக ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.