Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கை சிறுவர்களுக்காக விசேட நிவாரணத் திட்டம் அறிமுகம்

July 30, 2022
in News, Sri Lanka News
0
ஆப்கானில் உணவு இல்லாமல் குழந்தைகளை விற்கும் பெற்றோர் | ஐ.நா. வேதனை

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முன்பள்ளி மாணவர்கள் மற்றும் தாய்மார்களுக்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான, யுனிசெப் ஸ்ரீலங்கா ( UNICEF Sri Lanka) விசேட நிவாரணப் பொதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொழும்பு மாநகர சபை மற்றும் பொது சுகாதார மருத்துவச்சிகளின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இந்த முயற்சியின் மூலம், நகர்ப்புற ஏழை மற்றும் மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன.

இலங்கையில் உணவுப் பணவீக்கம் மற்றும் அடிப்படைப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேலும் பல குடும்பங்கள் சிரமப்படுகின்றனர் என்று யுனிசெப்பின் இலங்கைப் பிரதிநிதி ஏ.ஐ, எம்மா பிரிகாம் தெரிவித்துள்ளார்.

அதிகரித்துள்ள உணவு பணவீக்கம்

இலங்கை சிறுவர்களுக்காக விசேட நிவாரணத் திட்டம் அறிமுகம் | Vide Relief Package Scheme

மலிவு விலையில் சத்தான உணவு இல்லாமை, குழந்தைகளுக்கு, குறிப்பாக அவர்களின் வாழ்நாள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் மாதத்தில் உணவுப் பணவீக்கம் 80 சதவீதத்திற்கும் மேலாக, தொடர்ந்து அதிகரித்து வருவதால், கொழும்பு மாநகரப் பகுதியில் புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கொண்ட சுமார் 3,000 தாய்மார்களுக்கு 5000 ரூபாய் பெறுமதியான, உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுப்பதிலும், ஆரம்பக் கல்வியை குழந்தையின் வளர்ச்சியில் முக்கியமான முதல் படியாக ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தப்படுவதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

இலங்கையில், குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு மிகவும் அவநம்பிக்கையான சூழ்நிலையில், யுனிசெஃப் சமீபத்தில் இலங்கைக்கு மிகவும் தேவையான ஆதரவைக் கோரும் அவசர உலகளாவிய வேண்டுகோளை அறிமுகப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கைக்கு உதவும் ஆர்வத்தில் நடிகர் கமல்ஹாசன்

Next Post

ஜனாதிபதி ரணில் எடுத்துள்ள முக்கிய தீர்மானங்கள்

Next Post
அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதியுள்ளது | ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் எடுத்துள்ள முக்கிய தீர்மானங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures