இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்படலாம் என்று நான்கு நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்தது.
இந்தியா எச்சரிக்கை விடுத்தும் அதிகாரிகள் போதிய கவனம் தராததால் தொடர் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளதென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டு இருந்த நிலையில், இன்று காலை சுமார் 9 மணியளவில் இந்த திடீரென குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.