Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கை கால்பந்தாட்டத்தை மேம்படுத்த தூய சிந்தையுடன் உழைக்கக்கூடிய தலைவர் தக்ஷித

August 12, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
3 ஆவது தடவையாக பிற்போடப்பட்ட சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர்

இலங்கை கால்பந்தாட்டத்திற்கு புத்துயிர் கொடுத்து அதனை மேம்படுத்துவதற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் தூய சிந்தையுடன் உழைக்கக்கூடிய ஒரே ஒரு தலைவர் தக்ஷித திலங்க சுமதிபால என ஸ்ரீலங்கா சொக்கர் மாஸ்டர்ஸ் சங்கம் ஏகோபித்த குரலில் தெரிவித்துள்ளது.

கொழும்பு நிப்பொன் ஹொட்டேலில் ஸ்ரீலங்கா சொக்கர் மாஸ்டர்ஸ் சங்கத்தினால் புதன்கிழமை (09) பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘கால்பந்தாட்டத்தைப் பாதுகாப்போம்’ என்ற தொணிப்பொருளில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஊடக சந்திப்பில் பேசிய ஸ்ரீலங்கா சொக்கர் மாஸ்டர்ஸ் சங்கத்தின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமான திலக் பிரிஸ்,

‘கடந்த பல்லாண்டுகளாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் நிருவாகிகளாக பதவி வகித்து கால்பந்தாட்ட விளையாட்டை சீரழித்தவர்கள் பதவி ஆசைபிடித்து மீண்டும் நிருவாக சபை உறுப்பினர்களாக வருவதற்கு முயற்சிக்கின்றனர். கால்பந்தாட்ட விளையாட்டை உண்மையாக நேசிப்பவர்கள் அத்தகையவர்களை விரட்டியடிக்க வேண்டும். இதுதான் கால்பந்தாட்டத்தை மீட்டெடுக்க கிடைத்துள்ள கடைசி சந்தர்ப்பம். இந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது.

‘இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் நிருவாகப் பதவிகளை வெறுங்கையுடன் ஏற்றவர்கள் இன்று செல்வசெழிப்போடு சொகுசாக வாழ்ந்துவருகின்றனர். ஆனால், அவர்களால் இலங்கை கால்பந்தாட்டம் அதள பாதாளத்திற்கு தள்ளிவிடப்பட்டுள்ளது.

கால்பந்தாடட வீரர்களுக்கும் அவர்கள் சரியான ஊதியங்களை வழங்கவில்லை. எனவேதான் கால்பந்தாட்டத்தை மேம்படுத்த புதிய தலைமைத்துவம் அவசியம் என நாங்கள் வலியுறுத்துகிறோம். அதற்கு பொறுத்தமானவர் அநுராதபுரம் கால்பந்தாட்ட லீக்கில் தலைவராக பதவி வகிக்கும் தக்ஷித்த திலங்க சுமதிபால ஆவார்’ என்றார்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராக தக்ஷித்தவை தெரிவுசெய்யும்பொருட்டு அவருக்கு லீக்குகளின் வாக்குகளை வழங்குமாறு லீக் தலைமைத்துவங்களைக் கோரவுள்ளோம். கால்பந்தாட்டத்தை விலை பேசவும் வேண்டாம், விலைபோகவும் வேண்டாம் என லீக் பிரதிநிதிகளைக் கொருகிறோம். எங்களது சங்கம் தூய்மையும் நேர்மையும் மிக்கது. அதனால்தான் தூய்மையும் நேர்மையும் மிக்க தக்ஷித்தவை இலங்கை கால்பந்தாட்ட நிருவாக தலைமைப் பதவியில் அமர்த்த முன்வந்துள்ளோம்’ என திலக் பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.

இந்த ஊடக சந்திப்பில் பேசிய முன்னாள் தேசிய கால்பந்தாட்ட கோல்காப்பாளரும் தெரிவாளரும் பயிற்றுநரும் பதில் தொழில்நுட்ப பணிப்பாளருமான தாமோதரன் சந்த்ரசிறி பேசுகையில், ‘இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன நிருவாகிகளின் பலவீனம் மற்றும் இயலாத்தன்மை காரணமாகவே இலங்கை கால்பந்தாட்டம் கிடுகிடுவென பின்னோக்கிச் சென்றுள்ளது.

எனவே வீழ்ச்சி அடைந்துள்ள கால்பந்தாட்டத்தை காப்பாற்றுவதைக் குறியாகக் கொண்டு செயற்பட எமது சங்கம் முன்வந்துள்ளது. எங்களது சங்கத்திற்கு வாக்குரிமை இல்லாத போதிலும் எங்களால் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் என நம்புகிறோம். அந்த நம்பிக்கையில்தான் தலைமை வேட்பாளராக அநுராதபுரம் கால்பந்தாட்ட லீக் தலைவர் தக்ஷித திலங்க சுமதிபாலவை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். ;’ என்றார்.

‘ஏற்கனவே சம்மேளன நிருவாகிகளாக இருந்தவர்கள் கால்பந்தாட்டத்தின் வளர்ச்சிக்காக காத்திரமான திட்டங்களை அமுல்படுத்தவில்லை. அது மட்டுமல்லாமால் அந்த நிர்வாகிகள் ஒருவர்மீது ஒரு சேறு பூசிக்கொண்டனர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் சுமத்திய குற்றச்சாட்டுக்களை பத்திரிகைகள், இலத்திரணியல் ஊடகங்கள் பல சந்தர்ப்பங்களில் வெளியிட்டன.

உலகமே அறிந்த அந்த உண்மைகளை நாங்கள் மீண்டும் வெளியிடவேண்டிய அவசியம் இல்லை. அன்று தனித்தனியாக கேக் சாப்பிட்டவர்கள், இன்று மூவேந்தர்கள் என தங்களைத் தாங்களே கூறிக்கொண்டு ஒரே கேக்கை சாப்பிட எத்தனிக்கின்றனர். இதனை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

‘எனவேதான் இலங்கை கனிஷ்ட கால்பந்தாட்ட அணிக்காக விளையாடியவரும் இளம் வர்த்தகருமான அநுராதபுரம் லீக் தலைவர் தக்ஷித திலங்க சுமதிபால புதிய தலைவராக வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். மேலும் அவர் கால்பந்தாட்டத்திற்கு நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றுவதாக உறுதிவழங்கியுள்ளார்.

றோயல் கல்லூரியின் பழைய மாணவரான அவர் ஒரு பட்டதாரியுமாவார். எனவே அவரைத் தலைவராக தெரிவுசெய்து கால்பந்தாட்டத்தை மேம்படுத்துவதற்கு லீக் பிரதிநிதிகள் அவருடன் கைகோர்க்கவேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்’ என தாமோதரன் சந்த்ரசிறி மேலும் கூறினார்.

Previous Post

‘கான்ட்ராக்டர் நேசமணி’ வடிவேலுவை இயக்கிய பிரபல இயக்குநர் சித்திக் காலமானார்!

Next Post

மணிப்பூரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் மேலும் ஒரு பெண் பாதிப்பு

Next Post
மணிப்பூரில் வெடித்த கலவரம் | 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு – இணைய சேவை முடக்கம்

மணிப்பூரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் மேலும் ஒரு பெண் பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures