2025ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையேயான 12 ஆவது வருடாந்த இருதரப்பு கூட்டு பயிற்சி (SLINEX-2025 ) எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்தப் பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. அன்படி, 14 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகம் சார் பயிற்சியும், அதனை தொடர்ந்து 17 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கொழும்பில் கடல்சார் பயிற்சியும் நடைபெறும்.
இந்த பயிறச்சிகளில் இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் ஜோதி (கப்பற்படை டேங்கர்) மற்றும் ஐஎன்எஸ் ராணா (அழிப்பான்) ஆகிய கப்பல்கள் பங்கேற்க உள்ளன.
இலங்கை கடற்படையில் எஸ்எல்என்எஸ் விஜயபாகு (முன்னேற்ற ஆஃப்ஷோர் ரோந்து கப்பல்) மற்றும் எஸ்எல்என்எஸ் சயுரா (OPV) ஆகிய கப்பல்கள் பங்கேற்க உள்ளன.
மேலதிகமாக இலங்கை விமானப்படையின் பிஇஎல் 412 ஹெலிகொப்டர்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்க உள்ளது. இரு கடற்படைகளின் விசேட படைகளும் பயிற்சியை மேற்கொள்ளும்.
இதற்கு முன்னர் இந்த பயிற்சி 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சி இரு கடற்படைகளுக்கும் இடையேயான பன்முக கடல்சார் நடவடிக்கைகளில் இடை-செயல்பாட்டை மேம்படுத்துதல், பரஸ்பர புரிதலை மேம்படுத்துதல் மற்றும் விசேட நடைமுறைகள்/நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
துறைமுக கட்டத்தில் விளையாட்டுப் போட்டிகள், யோகா அமர்வு மற்றும் கலாச்சார நிகழ்வுகள் ஆகியவை அடங்கும்.
இது இரு கடற்படைகளின் பணியாளர்களும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளவும், பகிரப்பட்ட மதிப்புகளை மீண்டும் வலுப்படுத்தவும், நட்பு மற்றும் தோழமையின் பிணைப்புகளை உருவாக்கவும் வாய்ப்பளிக்கும்.
இலங்கை கடற்படை தலைமையகத்தின் பணிப்பாளர் ரியர் அட்மிரல் பி லியனகமகே, ஐஎன்எஸ் ஜோதியின் கட்டளை அதிகாரி, கேப்டன் சேதன் ஆர் உபாத்யாயா மற்றும் ஐஎன்எஸ் ராணாவின் கட்டளை அதிகாரி, கேப்டன் கேபி ஸ்ரீசன், இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் ஆனந்த் முகுந்தன் ஆகியோர் பயிற்சியின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.