உலகில் லஞ்ச, ஊழல்களுக்கு எதிராக செயற்படும் நாடுகளின் வரிசையில் இலங்கையை முதல் இடத்துக்கு கொண்டுவருவது தனது எதிர்பார்ப்பு எனவும், தனது ஆட்சிக் காலத்துக்குள் அதனை சாதித்துக் காட்டுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஐ.நா. பிரதானிகளின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறினார்.
வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள பாரிய ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் கொண்டுவர சர்வதேச அமைப்புக்களின் தலையீடும், உதவியும் தேவை எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

