பயங்கரவாதத்தின் கொடூரமான செயல்களால் இலங்கையை ஒன்றும் செய்து விடமுடியாது என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அந்த தாக்கத்தில் இருந்து இலங்கை விரைவில் மீண்டெழும் என தான் நம்புவதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
59 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசேட விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததார்.
அதன்பின்னர் தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தை சென்று பார்வையிட்ட பிரதமர் இதனை அடுத்து டுவிட்டரில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் பதிவிட்டுள்ளதாவது, “இலங்கை விரைவில் மீண்டெழும் என நான் நம்புகின்றேன். பயங்கரவாதத்தின் கொடூரமான செயல்களால் இலங்கையை ஒன்றும் செய்து விடமுடியாது. இலங்கையில் உள்ள மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
