இலங்கையில் 5ஜி வலையமைப்பு தொழில்நுட்பம் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து பரீட்சிக்கப்படவுள்ளது.
கொழும்பிலும் மேல் மாகாணத்தின் வேறு சில பிரதேசங்களிலும் இது பரீட்சிக்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவலாக்கப்படும்.
உயர்வேக தரவு பரிமாற்றத்தை கொண்டுள்ள 5 ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் பல துறைகளிலும் இணைய மேம்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
உலகில் தற்போது முன்னணி நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்ப விற்பனையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

