அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனையின் அடிப்படையில் சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரமானது தயாரிக்கப்பட்டு விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
உலக சந்தையில் எரிபொருள் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப விலையை நிர்ணயிப்பதற்காக விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அது போலவே உலக சந்தையில் எரிவாயுவிற்கான கேள்வி மற்றும் விலை ஏற்ற, இறக்கத்திற்கேற்ப இலங்கையில் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரத்தை தயாரித்து வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், சமையல் எரிவாயு வழங்கும் நிறுவனங்கள் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பாக விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

