Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கையில் போர்க்குற்றங்களே இடம்பெறவில்லை.! அநுர தரப்பின் அதிர்ச்சி அறிக்கை

September 14, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடமொன்றுக்கு வழங்கியுள்ள தனிப்பட்ட செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

போரில் நிகழக்கூடாத விடயங்கள்

அதன்போது, மேலும் கருத்து தெரிவித்துள்ள பிரதி அமைச்சர், “போரின் போது நிகழக்கூடாத சில விடயங்கள் நடந்திருக்கலாம் என்ற கருத்துகள் இருக்கின்றன. 

இலங்கையில் போர்க்குற்றங்களே இடம்பெறவில்லை.! அநுர தரப்பின் அதிர்ச்சி அறிக்கை | No War Crimes Committed Sri Lanka Deputy Minister

ஆனால் அவை அனைத்தும் போர்க்குற்றங்கள் என்ற வகையில் வராது, போரின் போது சில சூழ்நிலைகள் தவிர்க்க முடியாமல் ஏற்படும்” எனக் கூறியுள்ளார்.

அதனால் இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அர்த்தமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மனித உரிமைகள் அமர்வு

மேலும், ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவுள்ளனவா என்ற கேள்விக்கு பதிலளித்தபோது பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, 

“அது குறித்து எனக்கு தெரியும். கடந்த 11 மாதங்களாக எங்கள் அரசு சமரசத்தையும் இன நல்லிணக்கத்தையும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கும் பாடுபட்டுள்ளது. 

இலங்கையில் போர்க்குற்றங்களே இடம்பெறவில்லை.! அநுர தரப்பின் அதிர்ச்சி அறிக்கை | No War Crimes Committed Sri Lanka Deputy Minister

சட்டமும் ஒழுங்கும் நிலைநிறுத்தும் வகையில் எங்களின் கொள்கை முடிவுகள் சமூகத்தில் உண்மையான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. 

இப்போது எத்தனை கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், கடந்த 11 மாதங்களில் நாங்கள் செய்தவற்றை உலகிற்கு காட்டியுள்ளோம்,” என்றார்.

Previous Post

நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட ‘கும்கி 2’ பட ஃபர்ஸ்ட் லுக்

Next Post

செம்மணியில் மக்களை கொன்று புதைத்தது இராணுவமா.! கேள்விகளை தொடுக்கும் முக்கிய புள்ளி

Next Post
செம்மணியில் மக்களை கொன்று புதைத்தது இராணுவமா.! கேள்விகளை தொடுக்கும் முக்கிய புள்ளி

செம்மணியில் மக்களை கொன்று புதைத்தது இராணுவமா.! கேள்விகளை தொடுக்கும் முக்கிய புள்ளி

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures