எமது மக்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்படும்போது வாய்மூடி மெளனிகளாக இருந்து ,போரை ஊக்குவித்து ,போர்க்கருவிகளை அள்ளி வழங்கி ஆதரவு வழங்கிய நாடுகளில் இயற்கையின் கோரத்தாண்டவமும் ,நோயின் கோரப்பிடியும் ,மத முறுகல்களும் தலைவிரித்தாடுகின்றன .
ஐயோ அம்மா என்ற குரலின் ஓலங்களை அந்த நாடுகள் இப்போ அனுபவிக்கின்றன .
ஒரு உயிரின் வலியை எமது மக்கள் அனுபவிக்கும்போது புரிந்து கொள்ளாத உலக நாடுகள், போரை ஊக்குவித்த உலக நாடுகள், உயிரின் வலியையும் வலிந்த வன்முறைகளின் வலியையும் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றன .
மனிதர்கள் செய்வதெல்லாம் இப்போ காலம்தாழ்த்தியும் வஞ்சிக்கும் .
இனிமேலும் இன்னொரு நாட்டில் வன்முறைகளை உலக நாடுகள் ஊக்குவிக்க கூடாது .தாம் வழங்கிய போர் ஆதரவை வெளிப்படுத்தி இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த ஒத்துழைக்க வேண்டும் .

