இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.
இன்று இதுவரை புதிதாக மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிவிப்பில் இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றிரவு வெளியான அறிவிப்பில் 77 போ் தொற்றுக்குள்ளாகி உறுதி செய்யப்பட்டிருந்தனா்.
இன்று யாழ்ப்பாணத்தில் ஒருவரும், தென்பகுதியில் இருவருமாக மூவர் தொற்றுக்குள்ளாகி உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது.

