Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் கொரோனா தொற்றியிருப்பதாக சந்தேகிக்கப்படும் 8 பேர் சிகிசிக்சை

February 16, 2020
in News, Politics, World
0
இலங்கையில் புதிய கொரோனா வைரஸ் தொடர்பாக தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வைரஸ் தொற்று நாட்டில் பரவாமல் தடுப்பதற்கு முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கான ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையினுள் நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் அதே நேரத்தில், நாங்கள் தற்போதைய நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கான மீளாய்வு கூட்டம் நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையங்கள் மற்றும் விமான போக்குவரத்து அதிகாரசபையுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதால், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிற குறியீட்டு சுகாதார அறிவிப்பு படிவத்தை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான நிற குறியீட்டு படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் நடந்து செல்லும்போது இந்த நோய் தொற்று இருந்தால் கண்டுபிடிப்பதற்கு அதிகாரிகளுக்கு எளிதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கொரோனா தொற்றியிருப்பதாக சந்தேகிக்கப்படும் 8 பேர் சிகிசிக்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, ஜனவரி மாதம் 27ஆம் திகதி இலங்கையில் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட சீன பெண் குணமடைந்து சீனாவுக்குப் புறப்படுவதற்குக் காத்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
Previous Post

சிறைச்சாலைக்கு சென்று ரஞ்சனை, நலம் விசாரித்த ரணில்

Next Post

கல்முனையில் தமிழர் மாநகர முதல்வராக வரக்கூடிய வாய்ப்பு – கருணா

Next Post

கல்முனையில் தமிழர் மாநகர முதல்வராக வரக்கூடிய வாய்ப்பு - கருணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures