ஆசிய – பசிபிக் பிராந்தியத்திற்கான ஐ.சி.சி டி 20 உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றுக்கான ஆயத்தத்தின் ஒரு பகுதியாக, ஜப்பான் தேசிய கிரிக்கெட் அணி ஒரு முக்கிய பயிற்சி சுற்றுப்பயணத்திற்காக இலங்கைக்கு வருகை தந்தது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுப்பயணத்தைக் குறிக்கும் வகையில், இலங்கைக்கான ஜப்பான் தூதர் அகியோ இசொமதா ஆகஸ்ட் முதலாம் திகதி அவரது இல்லத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், ஷம்மி சில்வா (இலங்கை கிரிக்கெட் தலைவர்), அலெக்ஸ் மியாஜி (தலைமை நிர்வாக அதிகாரி, ஜப்பான் கிரிக்கெட் சங்கம்), ஆஷ்லி டி சில்வா (தலைமை நிர்வாக அதிகாரி, இலங்கை கிரிக்கெட்), மற்றும் பிரியந்த காரியப்பெருமா (நல்லெண்ண தூதர், ஜப்பான் கிரிக்கெட் சங்கம்) உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஜப்பான் மற்றும் இலங்கை இடையே தொடர்ந்து வளர்ந்து வரும் இருதரப்பு உறவுகளில் கிரிக்கெட் பரிமாற்றத்தின் அடுத்த கட்டமாக ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கின்றது என்று ஜப்பான் தூதர் குறிப்பிட்டார், மேலும் கிரிக்கெட் இராஜதந்திரத்தின் ஆரம்பத்தை கொண்டாடினார்.
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்களான சனத் ஜயசூரிய (தலைமை பயிற்சியாளர், இலங்கை தேசிய அணி), சமிந்த வாஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், அதே போல் நட்சத்திர வீரர்களான பானுக ராஜபக்ஷ மற்றும் சரித் அசலங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பெருமை சேர்த்தனர்.
ஜப்பானின் இலட்சிய பயணத் ஆதரிக்கும் வகையில், இலங்கை கிரிக்கெட், இலங்கையைச் சேர்ந்த நான்கு 19 வயதுக்குட்பட்ட அணிகளுடன் ஏழு இருபதுக்கு 20 பயிற்சிப் போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த முயற்சி, இளம் திறமைகளை வளர்ப்பது, பரஸ்பர மரியாதை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான புரிதலை வளர்ப்பதுடன், கிரிக்கெட் உறவுகளை வலுப்படுத்துவதை உறுதி செய்கிறது.
இந்த கூட்டு சுற்றுப்பயணம், விளையாட்டு மற்றும் கலாச்சார பரிமாற்றம் ஆகிய இரண்டிலும் ஜப்பான் – இலங்கை உறவுகளை அதிகரிக்கும் மற்றொரு முயற்சியாகும், இது வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கும் சர்வதேச நல்லெண்ணத்திற்கும் ஒரு ஊக்கமளிக்கும் தளத்தை வழங்குகிறது.
