கொரோனா நோய் அறிகுறிகள் அற்ற தொற்றாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்காமல் விசேட நிலையங்களில் தடுத்து வைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையங்களை அதற்காக பயன்படுத்திக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவிததுள்ளார்.
சுயதனிமைப்படுத்தலில் நாங்கள் அடையாளம் காணும் தொற்றாளர்களை தொடர்ந்து சிகிச்சை நிலையங்களில் அனுமதிப்போம்.
எதிர்வரும் நாட்களில் எவ்வித அறிகுறிகளும் இல்லாத தொற்றாளர்கள் கண்கானிப்பு நிலையங்களில் தடுத்து வைப்பதற்கு அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த வகையில் அடையாளம் காணப்படும் நோயாளிகளை முகாமைத்தும் செய்து மிப்பெரிய பரவலை கட்டுப்படுத்தி கூடிய விரைவில் நாட்டை வழமை நிலைக்கு கொண்டு வருவோம் என விசேட வைத்தியர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

