இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு முன்னெடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் தாம் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்வதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
இலங்கை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் மரண தண்டனைக்கு எதிரான சர்வதேச நடைமுறையை ஏற்றுக் கொண்டிருந்தது. இந்த கொள்கையை மாற்றும் வகையில் மரண தண்டனை வழங்க இலங்கை தீர்மானம் எடுத்துள்ளதாகவும் பிரித்தானிய வெளிவிவகார செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தீர்மானம் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு காணப்படும் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினால், இலங்கையுடனான உறவில் விரிசல் ஏற்படும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.